Connect with us

ரச்சிதாவிடம் போன் நம்பர் கேட்க.. கிடைச்சதென்னவோ பல்ப் தான்.. இதெல்லாம் தேவையா மாஸ்டர்..?

Big boss 6

ரச்சிதாவிடம் போன் நம்பர் கேட்க.. கிடைச்சதென்னவோ பல்ப் தான்.. இதெல்லாம் தேவையா மாஸ்டர்..?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரச்சிதாவிடம் போன் நம்பர் கேட்டு அசிங்கப்பட்டுள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

கடந்த சில பிக்பாஸ் சீசன்கள் டல்லடித்தாலும், இந்த முறை 6வது சீசன், ஆரம்பம் முதலே பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் கடைசி வரை இருந்து தரமான சம்பவம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து, குடும்பம் குறித்து சிந்தித்துக் கொண்டே இருந்ததால், இரண்டாவது வார முடிவில் தானாக வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் எவிக்சன் மூலம் சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, ஷெரீனா மற்றும் நிவாஷினி ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே, நடிகை ரச்சிதாவிற்கு நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் காதல் வலை வீசி வருகிறார். ஆனால் ரச்சிதா எதற்கும் பிடிகொடுக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்கில், ராஜா ராணியாக இருவரும் ஜோடி சேர்ந்ததால் ராபர்ட் மகிழ்ச்சியில் திளைத்தார்.

ஆனால் இந்த டாஸ்கில் கடைசியில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை பிக்பாஸ் வெளியிட, அதற்கு பிறகு ரச்சிதா தன்னை முதுகில் குத்திவிட்டதாக கூறி ராபர்ட் மாஸ்டர் கதறிக்கதறி அழுதார். இதை பார்த்து ரச்சித்தாவும் உருக, ஒரு சாரி சொல்லி மீண்டும் தனது வலையை வீச ஆரம்பித்தார் ராபர்ட் மாஸ்டர்.

இந்நிலையில், ரச்சிதாவின் கான்டாக்ட் நம்பரை ராபர்ட் மாஸ்டர் கேட்டுள்ளார். கிச்சனில் ரச்சிதா சமைத்துக் கொண்டிருக்க, அப்போது அந்த பக்கமாக சென்ற ராபர்ட் மாஸ்டர், “நானும் 2 வாரமா உன்கிட்ட போன் நம்பர் கேக்குறேன். நியாபகம் இருக்கா? அசல் கோலார் போனதுல இருந்தே நான் நம்பர் கேக்குறேன்’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரச்சிதா, இது ஒரு விஷயம்ன்னு இப்படி கேட்டுட்டு இருக்கீங்களே என கலாய்த்துவிட்டு, நம்பர் சொன்னா நியாபகம் வெச்சுப்பீங்களா? பேப்பர் பேனா இருக்கா? என கேட்க, அதற்கு ராபர்ட் மாஸ்டர், “அதற்கான சூழல் வந்தபோது நீதான் நம்பர் தரவில்லை” என்றார். அதற்கு ரச்சிதாவோ, அச்சோ மறுபடியும் மொதல்ல இருந்தா என சொல்லிவிட்டு மீண்டும் சமைக்க தொடங்கிவிட்டார்.

வெளிப்படையாக முகத்தை காட்டாவிட்டாலும், ராபர்ட் மாஸ்டர் மீது ரச்சிதா கோபத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் ராபர்ட் மாஸ்டரை ரச்சிதா நாமினேட் செய்ததன் பின்னணியிலும் அது தான் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Big boss 6

Advertisement
 

Trending

 
Advertisement
To Top