Connect with us

சின்னத்திரை ஷூட்டிங் தொடங்குவது எப்போது.? ஆர்.கே.செல்வமணி விளக்கம்

Cinema News

சின்னத்திரை ஷூட்டிங் தொடங்குவது எப்போது.? ஆர்.கே.செல்வமணி விளக்கம்

கொரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களைக் கடந்து சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள், பெஃப்சி சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்தை படப்பிடிப்பை நடத்தலாம் என்று நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது.

மேலும் திரைப்பட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் கடந்த மாதம் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. அதேவேளையில் சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது இதுதொடர்பாக பெஃப்சி சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்திருக்கும் ஆடியோ பதிவில், “சின்னத்திரை படப்பிடிப்புக்கு எப்போது போகலாம் என்று தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். அதாவது ஜூலை 6-ம் தேதிக்கு பிறகு பழைய நடைமுறையின்படி ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

நான் ஐஎம்டி சங்கரிடம் பேசினேன். அவர் 6-ம் தேதிக்கு பிறகு புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. முன்பு கொடுத்த அனுமதியே போதும். மீண்டும் முதலமைச்சர், அமைச்சரைப் பார்த்து அனுமதி பெற வேண்டுமா என்று நான் அவரிடம் கேட்டேன். தேவைப்படாது. தேவைப்பட்டால் உங்களிடம் சொல்கிறேன் என்றார்.

ஆனாலும் 2-3 நாட்கள் காத்திருங்கள். எப்படி போகிறது என்று பார்த்துவிட்டு முடிவெடுப்போம் என்றும் சங்கர் என்னிடம் சொன்னார். ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு பழைய நடைமுறைகள் என்பதால், 8-ம் தேதியிலிருந்து சின்னத்திரை படப்பிடிப்புக்குத் தயாராகலாம். நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் உறுதிப்படுத்திவிட்டுச் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top