Connect with us

இனி தியேட்டர் பிரச்சினை இல்லை.. வாரிசு படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்..?

Cinema News

இனி தியேட்டர் பிரச்சினை இல்லை.. வாரிசு படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்..?

தமிழகத்தில் வாரிசு படத்தை செவென் ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பத்தூர் ரிலீஸை ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என முதல் முறையாக விஜய் நடிப்பில் இருமொழி படமாக வாரிசு படம் தயாராகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லாத சூழலில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படத்துக்கு குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்படுமென தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கைவிரித்துவிட்டது. இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் படத்தை வெளியிடுவதில் படக்குழு உறுதியாக உள்ளது.

இதற்கிடையே அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும், லைகா நிறுவனம் வெளிநாடுகளிலும் வெளியிட உள்ளது.

இந்நிலையில், வாரிசு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 படத்தை தயாரிக்க உள்ள செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top