Connect with us

RC15 – இந்த பாடலுக்கு மட்டுமே இவ்வளோ செலவுனா பாட்டு எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்க….

Cinema News

RC15 – இந்த பாடலுக்கு மட்டுமே இவ்வளோ செலவுனா பாட்டு எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்க….

RC15 படத்தின் நியுசிலாந்து படப்பிடிப்புக்காக நடிகர் ராம் சரண் தயாராகி வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன அதில் அவர் கலர்புலாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

RC15 படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் நடைபெற்றது அதனின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பல முக்கிய கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது.

நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது இதில் பல முக்கியமான காட்சிகளை பல கோடிகளில் எடுத்துள்ளனர் எஸ் ஜே சூர்யா நடித்த முக்கியமான காட்சிகளும் இந்த Schedule -இல் எடுக்க பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்காக படக்குழுவினர் நியுசிலாந்து புறப்பட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த பாடல் உருவாக உள்ளது RRR பட பாடலை விட அதிகமான செலவாம்.

இந்நிலையில் இந்த நியுசிலாந்து படப்பிடிப்புக்காக நடிகர் ராம் சரண் புதுவிதமான லூக்கிள் தாறுமாறாக தயாராக உள்ளார் இதற்காக அதிகமாக நெறய படங்களில் ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் உடன் ஆலோசனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன இதனால் மிகவும் ஹாப்பியாக உள்ளனர் ரசிகர்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "வித்தியாசமான கதைக்களத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஆலம்பனா' படத்தின் Trailer வெளியாகி வைரலாகிவருகிறது!"

More in Cinema News

To Top