Connect with us

இப்படி ஒரு கதைக்களம் கொண்ட படமா..?ராட்சசனை மிஞ்சிவிடும் போலயே!

Cinema News

இப்படி ஒரு கதைக்களம் கொண்ட படமா..?ராட்சசனை மிஞ்சிவிடும் போலயே!

நடிகர் விஷ்ணு விஷால்,நடிகை அமலா பால் கூட்டணியில் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியான படம் ராட்சசன்.இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது…இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது.

இந்தப் படத்தினை எழுதி இயக்கியிருந்தார் டைரக்டர் ராம்குமார் இவர் முன்னதாக விஷ்ணு விஷால் லீட் கேரக்டரில் நடித்திருந்த முண்டாசுப்பட்டி படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களும் இயக்குநருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் மிகச்சிறப்பாக அமைந்தது..

இந்த திரைப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்த ஒன்றாகும்..ஒரே மாதிரியாக நடக்கும் கொலைகளை மையமாக கொண்டு திரைக்கதையை உருவாக்கியிருந்தார் ராம்குமார்…

படம் மிரட்டியது என்றே சொல்லலாம்…இப்படம் சர்வதேச அளவில் 39 கோடி ரூபாய்களை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணி இணைந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரித்து வருகிறது…தற்போது வெளியாகிவரும் அனைத்து படங்களிலும் அதிகமான நடிகர்களை வைத்து மல்ட்டி ஸ்டார் படங்களாக எடுக்கப்பட்டு வருகிறது அது ஒரு புது ட்ரெண்டாக இருந்தது…

இந்நிலையில் தற்போது ராட்சசன் கூட்டணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் மொத்தமாகவே 6 கேரக்டர்கள் மட்டுமே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…இதுவும் மிகவும் புதிதாக இருக்கும் ஒரு படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது..எப்படி ராட்சசன் சம்பவம் செய்ததோ அதை போல இது செய்யும் என சொல்லப்படுகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஜவான் படத்தின் தடுக்கமுடியாத வசூல்! 16 நாட்களில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?!"

More in Cinema News

To Top