Connect with us

நடிகர் கமலுக்கு என்ன பிரச்சினை.. அறிக்கை வெளியிட்ட ராமச்சந்திரா மருத்துவமனை..!!

Big boss 6

நடிகர் கமலுக்கு என்ன பிரச்சினை.. அறிக்கை வெளியிட்ட ராமச்சந்திரா மருத்துவமனை..!!

நடிகர் கமலஹாசன், உடல்நல குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக நாயகன் கமலஹாசன் நேற்று திடீரென உடல்நல குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹைதராபாத் சென்று திரும்பிய பிறகு தான், அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆண்டவருக்கு என்னாச்சு என ரசிகர்களும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் பதறி வரும் நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் உடல் நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “கமலஹாசன் 23.11. 2022 அன்று லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நன்கு குணமடைந்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில், குணமடைந்து வீடு திரும்புவார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கமல் வீடு திரும்பினாலும், கண்டிப்பாக சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், நடிகர் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கேற்பதும் கேள்விக்குறி தான் எனக் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Big boss 6

Advertisement
 

Trending

 
Advertisement
To Top