Bigboss Tamil 5
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெற்ற பணத்தை வைத்து ராஜு செய்த முதல் காரியம்..! இணையத்தில் குவியும் பாராட்டு…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வந்தது . இதில் ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் பாவனி அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
இந்த சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாக மக்கள் அனைவருமே மிகுந்த சந்தோஷத்தில் கொண்டாடினார்கள்.
சின்ன திரையிலும் பெரிய திரையிலும் கதை எழுதுவதில் அதீத ஆர்வம் கொண்ட இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வருங்காலத்தில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ராஜுவை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர் வந்தால் கதையில் பல மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது .
இது ஒரு புறம் இருக்க தற்போது ராஜூவை பற்றி ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது . அதுஎன்னவென்றால் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ராஜு தனக்கு தெரிந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பண உதவி செய்துள்ளாராம்.
அதோடு தனது அம்மாவிற்கு ஒரு புதிய புடவை ஒன்றை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் இந்த செய்கையை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
