Connect with us

பிரபல நடிகர் ராஜ்கிரண் மகளை காதலித்து திருமணம் செய்த நாதஸ்வரம் பட நடிகர்..! வைரலாகும் போட்டோ

Cinema News

பிரபல நடிகர் ராஜ்கிரண் மகளை காதலித்து திருமணம் செய்த நாதஸ்வரம் பட நடிகர்..! வைரலாகும் போட்டோ

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரணின் மகள் ஜீனத், சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ என்ற சீரியலில் நடித்த முனீஸ்ராஜாவை காதத்ததாகவும் இருவரும் ராஜ்கிரண் குடும்பத்தின் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் முனிஷ்ராஜா தமிழ் குணசித்திர நடிகர் சண்முகராஜன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முனிஷ்ராஜா-ஜீனத் திருமணத்தை முனிஷ்ராஜா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் ராஜ்கிரண் குடும்பத்தில் ஒரு சிலர் இன்னும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘நாதஸ்வரம்’. இந்த சீரியலில் சம்மந்தம் என்கிற காமெடி ரோலில், உடல் மொழியாலும் நடித்து மிகவும் பிரபலமானவர் முனீஸ் ராஜா.

பிரபல சீரியல் நடிகர் சண்முக ராஜாவின் உடன் பிறந்த சகோதரரான இவர், எந்த ஒரு இடத்திலும் தன்னுடைய சகோதரர் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று, ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் முனிஷ்ராஜா-ஜீனத் திருமணம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கோவிலில் வைத்து இந்த திருமணம் எளிமையாக நடைபெற்றது என்று கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பிள்ளைகளின் ஆசைக்காக இவர்களது காதலை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் ராஜ்கிரண் மனைவி மட்டும் தற்போது வரை இவர்கள் திருமண விஷயத்தில் சமாதானம் ஆகவில்லை என கூறப்படுகிறது. ஜாதி, மதம், போன்றவற்றை கடந்து திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள முனிஷ் ராஜா – ஜீனத் தம்பதிக்கு தொடர்ந்து பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top