Connect with us

புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் வரும் “பாபா”..!! வெளியானது டிரெய்லர்..!!

Cinema News

புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் வரும் “பாபா”..!! வெளியானது டிரெய்லர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான பாபா படம் தற்போது ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான பாபா படம் கடந்த 2002 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் எம்.என்.நம்பியார், சுஜாதா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

நீலாம்பரி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் பாபா படம் நவீனப்படுத்தப்பட்டு, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வரும் டிசம்பர் 12 ஆம் தேதி மறு வெளியீடு செய்யப்பட உள்ளது.

இதையொட்டி, தற்போது மேற்கூட்டப்பட்ட பாபா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top