தர்பார் படத்தின் டும் டும் பாடல் புரமோ வீடியோவை படக்குழு…!நயன்தாராவுடன் ரொமான்ஸில் பட்டையை கிளப்பிய ரஜினி.! வீடியோ

0
236

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தர்பார் பட பாடலான டும் டும் பாடலின் புரமோ வீடியோவை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஜனவரி 9-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே ரசிகர்கள் எதிர்பார்த்தபடி தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.