Cinema News
25 லட்சத்தில் ஹேர்-கட் டாட்டூ பண்ணப்போகும் ரஜினி…ஜெயிலர் படத்தின் சுவாரசிய அப்டேட் இதோ
ரஜினியின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.’ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. படத்துக்காக அங்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாகவும் , கன்னட ஹீரோ சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோரும் நடிக்க உள்ளதாகவும் கூர்தொடுகிறது .
இந்நிலையில், இந்தப் படத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர், ரஜினிகாந்தின் லுக்கை மொத்தமாக மாற்ற இருக்கிறார் என்று தெரிகிறது. படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்துள்ளது. ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆலிம் ஹக்கிம், ’நமது ஒரே கிங், ரஜினிகாந்த்துடன் பணிபுரியும் புதுமையான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கும் ஆலிம் ஹக்கிம் பணிபுரிகிறார். சமீபத்தில் ராம் சரணின் புதிய லுக்கை வடிவமைக்கும் அவருடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
