Connect with us

தாதா சாகேப் பால்கே விருதை வாங்கிய ரஜினி …. ஒட்டு மொத அரங்கமே எந்திரித்து நின்று கொடுத்த கரகோஷம்…வைரல் வீடியோ

Cinema News

தாதா சாகேப் பால்கே விருதை வாங்கிய ரஜினி …. ஒட்டு மொத அரங்கமே எந்திரித்து நின்று கொடுத்த கரகோஷம்…வைரல் வீடியோ

இந்திய திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் விரும்பப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுவதற்காக ரஜினி நேற்றைய தினம் புதுடெல்லிக்குச் சென்றார்.மேலும் அவர் டெல்லி புறப்படுவதற்கு முன் கொடுத்த செய்டியாளர்கள் பேட்டியில் விருது வாங்குவதில் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ,இயக்குனர் பாலச்சந்தர் இல்லாதது வருத்தத்தை கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தாதா சாகேப் பால்கே விருதை வாங்குவதற்காக மேடையின் கீழ் அமர்ந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது .அவரது அருகில் அவர் மனைவி,மற்றும் பின் சீட்டில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்,அவரது இரண்டு மகன்கள் .விஜய்சேதுபதி ,கங்கை அமரன் உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர்.

தற்பொழுது துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிக்கு கொடுத்தார்.மேலும் விருது வாங்கும் ரஜினிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்.அதிலும் நடிகர் தனுஷ் ,அவரது மகள் ஐஸ்வர்யா ,அவரது பேரன்கள் விருது வாங்குவதை பார்த்து பூரிப்பில் கைதட்டினார்கள்.

More in Cinema News

To Top