Cinema News
சீரியலை விட்டு விலகிய ஆல்யா…லட்டு மாதிரி வாய்ப்பை கெட்டியாக பிடித்த அர்ச்சனா
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்ற ராஜா ராணி 2 சீரியல் 500 எபிடோடை தொட்டு வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ராஜா ராணி 2வின் 500 வது எபிசோடு கொண்டாட்டம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

ஏற்கெனவே இதற்கான ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் சீரியலின் முன்னாள் நாயகி ஆல்யா மிஸ்ஸிங். இது ஆல்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எப்போதுமே சுட்டி தனத்துடன் கலகலப்பாக பேசும் ஆல்யா இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இல்லை, ஆனால் அவர் இடத்தில் அர்ச்சனா மறும் ரியா ஆகியோர் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி சீரியல் வெற்றிப்பாதையில் சென்ற நேரத்தில் 2வது குழந்தைக்கு தாயாகி ஆல்யா சீரியலை விட்டு விலகினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியல் டி.ஆர்.பியும் அடி வாங்கியது. பின்பு சீரியலில் சந்தியாவாக அறிமுகம் ஆனார் ரியா. இவரின் நேர்த்தியான நடிப்பால் ராஜா ராணி தொடர் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதே போல் அர்ச்சனாவும் வில்லியாக பட்டையை கிளப்ப வழக்கம் போல் சீரியல் பரபரப்பாக ஒளிப்பரபாக தொடங்கியது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
