Connect with us

பிறந்த நாள் ஸ்பெஷல்.. ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட க்ளிம்ப்ஸ் வெளியீடு..!!

Cinema News

பிறந்த நாள் ஸ்பெஷல்.. ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட க்ளிம்ப்ஸ் வெளியீடு..!!

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடித்துள்ள ருத்ரன் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உட்பட பல படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் ருத்ரன் எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இதில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

படத்தில் மேலும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ருத்ரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் என பான் இந்தியா படமாக தயாராகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. கையில் ஆயுதத்துடன் ராகவா லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் அடித்து வீழ்த்தப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸின் வழக்கமான ஆக்‌ஷன் மசாலாவுடன், ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வதை போல் இந்த வீடியோ உள்ளது.

படம் டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top