சிம்பு குரலில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் முதல் சிங்கிள்..!அதுவும் ரிலீஸ் செய்வது யார் தெரியுமா..?

0
127

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜி என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹர்பஜன் சிங் அவர்களும் தற்போது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். Friendship என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். மேலும் படத்தின் கூடுதல் பலமாகப் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக தடைபட்ட பல படங்களில் இதுவும் ஒன்று என்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் வெளியானது.

நேற்று இப்படத்தின் கதாநாயகன் ஹர்பஜன் சிங் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக முக்கிய அப்டேட்டை தருவதாக படக்குழு நேற்று காலை அறிவித்திருந்தது.

6l6uobpg

அதன்படி ஒரே அப்டேட் மூலம் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்க்கக்கூடிய அளவுக்கு ஒரு தகவலை படக்குழு அறிவித்துள்ளது.அது இப்படத்தின் முதல் பாடல் தான். பிரண்ட்ஷிப் படத்தின் முதல் சிங்கள்-ஆக சூப்பர் ஸ்டார் ஆன்தம் பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடலை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இன்று வெளியிடுகிறார்.