Connect with us

டிசம்பர் 1இல் நயன்தாராவின் கோல்ட் ரிலீஸ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

டிசம்பர் 1இல் நயன்தாராவின் கோல்ட் ரிலீஸ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரேமம் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரேமம் திரைப்படம் மூலம் மிகப்பெரும் ஹிட் கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தற்போது மலையாள நடிகர் ப்ருத்விராஜ் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அறிவித்த தேதிக்குள் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியாததால், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறையை போல் சொதப்பல், இந்த முறை படம் நிச்சயம் வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் மற்றும் பிரேமம் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கோல்ட் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top