Connect with us

இரண்டு கைகளில் ஆஸ்கர் விருதை வைத்த படி மோடி பிரதமரிடம் வாழ்த்து பெற்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” குழு!!

Cinema News

இரண்டு கைகளில் ஆஸ்கர் விருதை வைத்த படி மோடி பிரதமரிடம் வாழ்த்து பெற்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” குழு!!

சமீபத்தில் நடந்து முடிந்த 95-ஆவது ஆஸ்கர் விருது விழாவில், இந்தியாவில் சார்பில் பங்கேற்று, ஆஸ்கர் விருதை தட்டி சென்ற, தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர், பிரதமர் மோடியை சந்தித்து, வாழ்த்து பெற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வளர்க்கப்பட்டு வந்த, ரகு மற்றும் அம்மு ஆகிய இரண்டு யானை குட்டிகள், அவர்களிடம் எப்படி பழகுகிறது, ஒரு தாய், தந்தை போல் இந்த யானை குட்டிகளை அவர்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் காட்டி இருந்தது.

கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய, தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தை, குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆவணப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்று 95-வது அகாடமி விருதை பெற்ற முதல், இந்திய ஆவனத்திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இந்த ஆவணப்படத்தின், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை தாண்டி, யானைகளை பிள்ளைகள் போல் வளர்த்த பொம்மன் மற்றும் பெல்லி இருவரும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

எனவே தமிழக அரசு தரப்பில் பொம்மன் மற்றும் பெள்ளி இருவரையும் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

மேலும் நெட்பிளிக்ஸ் சார்பாகவும், இயக்குனர் கார்த்திகி , தயாரிப்பாளர் குனீத் மோங்கா, பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

அப்போது, ஆஸ்கர் விருதை அவர் கையில் கொடுக்க, பிரதமர் இரு கைகளிலும் ஆஸ்கர் விருதை பிடித்து நிற்பது போல் வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது. “‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் புத்திசாலித்தனமும் வெற்றியும் உலக அளவில் அறியப்பட்டுள்ளது.

See also  ஓரினச்சேர்க்கை, திருநங்கையுடன் உறவு, நடிகை திவ்யா குற்றச்சாட்டு சீரியல் நடிகர் அர்னவ் கொடுத்த பதிலடி...

அனைவரது கவனத்தையும், பாராட்டுகளையும், பெற்றுள்ளது. இன்று, அதனுடன் தொடர்புடைய புத்திசாலித்தனமான குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top