Connect with us

“LEO படம் ரிலீசுக்கு முன்பே ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது! Viral!”

Cinema News

“LEO படம் ரிலீசுக்கு முன்பே ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது! Viral!”

தளபதி விஜய் நடித்த ’LEO’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆகி உள்ளதாக வெளியான செய்தியை பார்த்தோம். குறிப்பாக இங்கிலாந்தில் இந்த படத்தின் முன்பதிவு பெறும் சாதனை செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’LEO’ திரைப்படத்தின் ஜெர்மனி முன்பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ’LEO’ திரைப்படத்திற்கு ஜெர்மனியில் இதுவரை 68,000 யூரோ முன்பதிவு மூலம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையிலேயே இந்த வசூல் செய்து உள்ளது என்பது ஆச்சரியமான தகவல்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் ரிலீஸ் க்கு முன்னர் ஜெர்மனியில் 66,000 யூரோ வசூல் செய்ததாகவும் ’ஜெயிலர்’ திரைப்படத்தை விட 2000 யூரோ அதிகமாக தற்போது ’LEO’ வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ’LEO’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் தமிழின் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

More in Cinema News

To Top