Connect with us

தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடி வசூல்.. வசூலில் சாதனை படைத்து வரும் லவ் டுடே..!!

Cinema News

தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடி வசூல்.. வசூலில் சாதனை படைத்து வரும் லவ் டுடே..!!

எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பால் வசூலில் பிரமாண்ட சாதனை படைத்து வருகிறது.

கோமாளி திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களமிறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், இரண்டாவதாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அதில் தானே கதாநாயகனாக நடித்திருந்தார்.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வெளியாகியிருந்தது. ஆனால் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்று, குறிப்பாக, 2கே கிட்ஸ் இளைஞர்களிடம் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வந்தது. மேலும், படம் வெளியாகி 20 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் ஆறு கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் ஒன்பது மடங்கு அதிக அளவில் வசூலை வாரிக்குவித்துள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  படத்தை தாண்டி கவர்ச்சி காட்டிய நயன்தாரா…இதுதான் புது தொழிலா??வைரலாகும் வீடியோ!

More in Cinema News

To Top