Connect with us

பிரபு தேவா நடிக்கும் புதிய அதிரடி த்ரில்லர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்….

Cinema News

பிரபு தேவா நடிக்கும் புதிய அதிரடி த்ரில்லர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்….

நடன இயக்குனராக மாறிய நடிகர் பிரபுதேவா பல புதிய முயற்சிகளில் தன்னை பிஸியாக வைத்து இருக்கிறார். சாம் ரோட்ரிக்ஸ் என்ற அறிமுக இயக்குனருடன் பிரபுதேவா ஒரு அதிரடி த்ரில்லரில் கையெழுத்திட்டார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது . இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த புதிய திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். பிரசாத்.எஸ்.என். இசையமைக்க முன்னணி படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் பிரபு தேவா பொன் மாணிக்கவேல், யங் மங் சங், ஓமை விழிகள், பாகீரா, பொய்க்கால் குதிரை, குலேபகாவலி இயக்குனர் கல்யாணின் இன்னும் பெயரிடப்படாத படம், மற்றும் அபிஷேக் ஃபிலிம்ஸுக்கு இன்னும் இரண்டு படங்கள் உட்பட பல்வேறு படங்களின் தயாரிப்புகள் உள்ளன.

More in Cinema News

To Top