Connect with us

“மணி சார் படத்துல ஒரு சின்ன கேரக்டர்..” ஐஸ்வர்யா லக்ஷ்மி நெகிழ்ச்சி!

Cinema News

“மணி சார் படத்துல ஒரு சின்ன கேரக்டர்..” ஐஸ்வர்யா லக்ஷ்மி நெகிழ்ச்சி!

பொன்னியின் செல்வன் – 2 படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்பொது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய நடிகர் ஐஸ்வர்யா லக்ஷ்மி,”மணி சாரோட இந்த படத்துல ஒரு சின்ன கதாப்பாத்திரம் கூட கிடைச்சா போதும்னு இருந்துச்சு. இதை நான் பல நேர்காணல் போதும் சொல்லியிருக்கேன். ஆனால் அவர் பூங்குழலி கேரக்டர் கொடுத்தாரு. அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அந்த கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் சிறியதாக இருந்தாலும் எனக்கென ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதில் நான் பெரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை அனுபமாவின் Cute Recent போட்டோஷூட்!!

More in Cinema News

To Top