Connect with us

இரண்டு நாட்களில் ரூ.150 கோடி..!! பாக்ஸ் ஆபிசில் கலெக்ஷனை அள்ளும் பொன்னியின் செல்வன்..!!

Ponniyin_Selvan_1

Cinema News

இரண்டு நாட்களில் ரூ.150 கோடி..!! பாக்ஸ் ஆபிசில் கலெக்ஷனை அள்ளும் பொன்னியின் செல்வன்..!!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ஏற்கனவே ரூ 150 கோடியை ஐ தொட்டு விட்டது.

மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

படம் வெளியானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபல சினிமா வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ஏற்கனவே ரூ.150 கோடியைத் தொட்டுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் தமிழ்த் திரையுலகில் ஒரு சாத்தியமான கேம் சேஞ்சராக இருக்கும் என்று கூறப்படுகிறது. 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top