Connect with us

திரிஷாவின் PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!

Cinema News

திரிஷாவின் PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!

பொன்னியின் செல்வன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த த்ரிஷா, நீல நிற சேலையில்… பளபளக்கும் அழகை வெளிப்படுத்தும் விதமான வந்து ரசிகர்கள் மனதை மயக்கிய புகைப்படங்கள் இதோ…

பொன்னியின் செல்வன் படத்தில், முக்கியம் வாய்ந்த கதாபாத்திரம் குந்தவை. மிகவும் புத்திசாலிதம் மற்றும் சமயோஜித அறிவு கொண்ட பேரழகி அவர்.

இந்த கதாபாத்திரத்தை, ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏற்று நடித்துள்ளவர் நடிக்க த்ரிஷா. முதல் பாகத்தில் வந்திய தேவனுக்கு அடுத்த படியாக அனைவராலும் பாராட்ட பட்ட கதாபாத்திரம் என்றால் அது, திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் தான்.

காரணம், ‘பொன்னியின் செல்வன்’ நாவலில்… குந்தவை என்கிற பெண் ஆளுமை எப்படி இருப்பார்? என கல்கி வர்ணனை செய்து எழுதி இருந்தாரோ… அதே கதாபாத்திரம் கண் முன் தோன்றியது போல் உள்ளதாக ரசிகர்கள் பாலர் தெரிவித்திருந்தனர்.

மேலும் 38 வயதை எட்டிவிட்ட த்ரிஷா, தமிழில் வெற்றி படம் கொடுக்க முடியாமல்… இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் அவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது மட்டும் இன்றி, அடுத்தடுத்த பல படங்களின் வாய்ப்புகளையும் பெற்று கொடுத்துள்ளது.

அந்த வகையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர்… த்ரிஷா நடிகர் விஜய்க்கு ஜோடியாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும், லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நீல நிற புடவையில்… குந்தவையின் மாடர்ன் வெர்ஷன் போல் வந்திருந்த திரிஷா, தன்னுடைய அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கி விட்டார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்..இத்தனை நடிகர்களா?!

More in Cinema News

To Top