நெற்றி நிறைய விபூதியுடன் கோவிலில் திருமாவளவன்.

0
147

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.பல்வேறு இடங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற திருமாவளவன் திடீரெனெ சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார்.ங்குள்ள கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்பு கோயில் நடைமுறைப்படி, சட்டையைக் கழற்றிவிட்டு சித்சபைக்கு சென்ற அவர், நடராஜரையும் தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள பொது தீட்சிதர்கள் நிர்வாக அலுவலகத்தில் சிறிது நேரம் அமர்ந்த திருமாவளவன், அங்கிருந்த தீட்சிதர்களிடம் உரையாடி வாக்கு கேட்டார்.

இச்சம்பவத்தின் போது நெற்றி நிறைய விபூதியுடன் திருமாவளவன் இருந்தார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியான போது, பெரும் கிண்டலுக்கு ஆளானது