வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து!! தேர்தல் ஆணையம் உத்தரவு

0
147

வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார்.   

துரைமுருகன் கல்லுரியில் இருந்து பணம் 10.50 லட்சம் பணம் வருமான வரித்துறையினரால் பிடிபட்டது. அடுத்தகட்ட சோதனையில் சுமார் 11.50 கோடி பணம் பிடிபட்டது.

பின்னர் விசாரணையில் கணக்கில் வராத பல கோடிக்கணக்கான பணம் இருப்பதால், வருமான வரித்துறையினர் பல பிரிவுகளின் கீழ் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மற்றும் 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருமான வரித்துறையின் அறிக்கையை ஜனாதிபதி பார்வைக்காக தேர்தல் ஆணையம் அனுப்பியது. இதனை கவனித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடனடியாக வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டார்.