ஐ .நா உலக தலைவர்களை சரமாரியாக கேள்வி கேட்டு விளாசிய சிறுமி !

0
25

கிரேட்டா தன்பெர்க் எனும் ஸ்வீடன்  நாட்டை சேர்ந்த சிறுமி ஐ.நா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேசினார்.அந்த மாநாட்டில் அவர் பல உலக தலைவர்களிடம்  பல கேள்விகளை  சரமாரியாக எழுப்பியுள்ளார். கடந்த 30 ஆண்டுகாலமாக சுற்று சூழல் மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இளைய சமுதாயத்தினரை திரட்டி பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.

இதையடுத்து ஒட்டு மொத்த உயிரின சூழலும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த மாநாட்டில் பேசிய அவர், பல உலக தலைவர்கள் பணம் ,பொருளாதர வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசி வருவதாகவும் உலகம் பேரழிவின் தொடக்கத்தில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்களை வெளியேற்றுவதில் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தினரையும் தலைவர்கள் ஏமாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இது குறித்து நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை ஆனால் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கும் உங்களுக்கு எவ்வளவு தைரியம் என்றும் அவர் கடுமையாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here