திமுகவை குற்றம்சாட்டும் கூட்டுறவு துறை அமைச்சர்?

0
146

நம் தமிழ்நாட்டை தாய்நாடு என்று கூறும் வகையில் தாய் தன் குழந்தைகளை எந்தவொரு துன்பமும் இல்லாமல் அரவனைப்பது போல் ஜெயலலிதா நம் அனைவரையும் பாசம் என்ற கூன்டிற்குள் அரவனைத்தார். இவ்வளவு அன்புமிக்க இவர் நம் நாட்டின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் சில நச்சு பாம்புகள் அவரை கொன்று பேரிழப்பை தேடி தந்து விட்டன.

சமீபத்தில் கூட்டுறவுத்துறை ராஜு ஓசூரில் பேட்டியளித்த இவர் ஜெயலலிதா மரணத்திற்கு திமுகாவே முற்றிலும் காரணம் என கூறினார். ஓசூரில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 22 ஆயிரத்து, 555 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 95 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 5 சதவீத சங்கங்கள் மட்டுமே, நீதிமன்றம் சென்றன. அரசியல் சார்பற்ற தேர்தலாக தான், கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., அரசு, வெளிப்படையாக தேர்தலை நடத்தியுள்ளது. சங்க வளர்ச்சியில் ஈடுபாடுள்ளோரை, கட்சி சார்பற்ற முறையில், வெற்றி பெற வைத்து உள்ளோம்.

‘ஜெயலலிதா மறைவிற்கு விசாரணை நடத்தப்படும்’ என, ஸ்டாலின்கூறுகிறார் என்றால், அவருக்கு என்ன அருகதை உள்ளது. தாயை இழந்து, தலைமையை இழந்து இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம், தி.மு.க., தான்.கர்நாடகாவில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில், நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின், உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு சென்று, ஜெயலலிதாவை மன
உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர் மறைவிற்கு காரணமாக இருந்தது, தி.மு.க., தான்.