அதிர்ச்சி செய்தி: தமிழகத்தில் டிக் டாக்கிற்கு தடை??

0
196

தமிழக பட்ஜெட்டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்றைய சட்டசபை கூட்டத்தில் M.L.A தமிம் அன்சாரி தமிழக சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டிக் டாக் செயலியை தடை செய்யவேண்டுமென்று தெரிவித்தார்.

அப்போது அதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் டிக் டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிவை சந்திப்பதால் ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்வதை போல டிக் டாக் செயலியையும் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.