தமிழக அமைச்சர்கள் வெளிநாடு செல்ல காரணம் என்ன தெரியுமா?

0
84

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர்  இப்போது அமெரிக்காவில்  உள்ளார். அவரோடு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர்.சிலர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி விட்டனர்.

இந்தநிலையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சமீபத்தில் அமைச்சர் சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக சொந்த பயணமாக அமைச்சர்கள் இருவரும் சென்றுள்ளார்கள்.மேலும் எகிப்து நாட்டுக்கு  அமைச்சர் பாண்டியராஜன்  சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது