“தோத்ததுக்கு கூட கண்கலங்கல ஆனால் இதை கேட்டதும் கண்கலங்கி விட்டேன்”–தமிழிசை!!

0
121

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே அதன் கூட்டணி கட்சி அதிமுக வென்றது. மற்றும் அனைத்திலும் பாஜக கூட்டணி கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாஜக-வின் நட்சத்திர வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன், எச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றபின் பாஜக அமைச்சர் எங்களின் முதல் வேலை கேதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைப்பது மற்றும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவது எனக் கூறினார்.

இதனைக் கேட்ட தமிழசை தன் ட்விட்டர் பக்கத்தில் அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்டு நான் கண்கலங்கி விட்டேன். தமிழகத்திற்கு நீங்கள் ஒரு எம்பியைக் கூட தராமல் இருந்தாலும் உங்களுக்காக பாஜக தன் கடமையை செய்யும் என பதிவிட்டிருந்தார்.