டிடிவி தினகரன் கட்சியில் இணைந்த பிரபல பாடகர்!!!

0
163

தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த பாடகரான மனோ, இன்று துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 30,000 பாடல்கள் மேல் பாடியுள்ளார்.

சமீபகாலமாக பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று சிறப்பித்து வருகிறார்.

1986 ஆம் ஆண்டு வெளிவந்த பூவிழி வாசலிலே எனும் படத்தில் ‘அண்ணே அண்ணே’ என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா.

இவர் பிரபலமானது, பிரபு நடித்து வெளிவந்த சின்னத்தம்பி படத்தில் “தூளியிலே” எனும் பாடல் இவர் குரலில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசின் விருது கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

கமல் நடித்த சிங்காரவேலன் என்னும் படத்தில் கமலுக்கு நண்பராகவும் நடித்துள்ளார்.