இந்தி திணிப்பு பற்றி பேசிய ரஜினிகாந்த்! பா.ஜ.கவை எதிர்த்து பேசி அதிரடி!

0
100

இந்தி மொழியை திணித்தால்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதிராக  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.துரதிஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டுவர முடியாது. இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்,ஏன் ஒரு சில வட இந்திய மக்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.