மனோகர் பாரிக்கரின் இழப்பை அடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு!!

0
189

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் இறந்ததை அடுத்து அவருக்கு பதிலாக பிரமோத் சாவந்த் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவாவில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தா.ர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் கோவா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அமெரிக்காவிற்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டும் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். நேற்றுமுன்தினம் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கோவா முதல்வராக அந்த மாநில பாஜக தலைவர் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.