நள்ளிரவில் பதியேற்பு கோவா முதல்வரானார் “பிரமோத் சாவந்த்”!!

0
116

கோவா முதல்வராக இருந்துவந்த முன்னாள் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், நீண்டநாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதன் பின் கணைய புற்றுநோய் ஏற்பட்டு வீட்டிலேயே தனது முதல்வர் பணியை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்றைய முன்தினம் அவர் இயற்கையெய்தினார். அவரது குடும்பத்தினருக்கு பலதரப்பட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அதன்பிறகு, நேற்று அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தற்போது பாஜக வசம் 12 சட்டமன்ற உறுப்பினர்களே இருந்தனர். ஆனால் காங்கிரசு 14 உறுப்பினர்களை கொண்டிருந்தது. இந்நிலையில், இதர சில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடிவு செய்தது.

அதனை தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பரிந்துரைக்கப்பட்டார்.

நேற்று இரவு பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றார். கோவா ஆளுநர் மிருதுளா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.