பா.ம.கவின் பெரும்புள்ளியை தூக்கிய திமுக!! ஸ்டாலின் நகர்த்திய அடுத்த காய்!!

0
233

தமிழகத்தில் வருகிற அடுத்த மாதம் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக  நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சேலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.இதையடுத்து  ஓமலூர் தொகுதி முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

மேலும் சேலம் மாவட்ட பா.ம.க செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கான பா.ம.கவினரும் தி.மு.கவில் இணைந்தனர்.