தற்போது நடந்த தேர்தலில் MP ஆன கருணாஸ் பட நாயகி…

0
442

பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார்.இவருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் கடந்த 2011 ஆம் திருமணம் நடந்தது.இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேட்சை ஆக போட்டியிட்டு வெற்றிபெற்று உள்ளார்.

இவர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு MP தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஆனால் இம்முறை தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவ சேனா கட்சி வேட்பாளரை சுயேச்சை ஆக வென்றுள்ளார். நவநீத் கவுர் கணவரான ரவி ராணா தற்போதும் எம்எல்ஏ வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here