மக்களோட மக்களா பரோட்டா போட்டு, டீ விற்ற மன்சூர் அலிகான் பெற்ற மொத்த வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

0
312

நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் . இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக அதிக இடங்கள் வெற்றி பெற்று மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பா ஜ க தொண்டர்கள் நாடுமுழுவதும் மகிழ்ச்சையை வெளிப்படுத்தி வருகின்றனர். பாஜக வெற்றி பெற்றதை அடுத்து வர்த்தக குறியீட்டு அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி காட்சிகள் ஒரு வெற்றியை மட்டும் பெற்றது .

தமிழகத்தை பொறுத்தவரை 38 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது ,. திமுக, அதிமுக தவிர்த்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் காய்கறி விற்று, மீன் வெட்டி, பரோட்டா போட்டு கவனிக்கத்தக்க நபராக வலம்வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் 54957 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.