வாங்க உக்காந்து பேசுவோம்.. அழைப்பு விடுத்த கிரண் பேடி.. ஏற்றுகொண்ட நாராயணசாமி!!

0
103

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே அரசுப் பணிகளை கவனிக்கிறார்.இன்றும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 5வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

 இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பேச்சுவார்த்தை  என்று  முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here