பாஜகவில் இணைந்த பிரபல நாயகி…..

0
151

பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை இஷா கோபிகர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’, விஜய் நடித்த ‘நெஞ்சினிலே’, அகத்தியன் இயக்கிய ‘காதல் கவிதை, ‘பிரசாந்த் நடித்த ‘ஜோடி, போன்ற தமிழ்ப்படங்களிலும், ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்ட நிலையில் அவரது முன்னிலையில் நடிகை இஷா கோபிகர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொண்டார்.