தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மாபெரும் முடிவு… இந்த முறையும் தாமரை மலருமா !!!

0
120

மக்களவை தேர்தல் அனைத்து கட்டங்களையும் முடிவுற்ற நிலையில் தற்போது அதன் தேர்தலுக்கு பிந்தைய கருது கணிப்பு முடிவுகள் ( எக்ஸிட் போல் ரெசல்ட்ஸ்) வெளியாகி உள்ளன. அதன் முழு விபரத்தை இந்த தொகுப்பில் காணலாம் .

நரேந்திர மோடியின் ஆட்சிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஆட்சி வரக்கூடாது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அவரை எதிர்த்து ஒன்ராக இணைந்து களம் கண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நிறைவுற்றுள்ளது. இதன் முடிவுகள் வரும் 23 அன்று வெளிவரவுள்ளது . அதன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இதோ ….

இந்தியா முழுவதும் ,
பாரதீய ஜனதா – 306
காங்கிரஸ் – 124
இதர கட்சிகள் – 112
தமிழகத்தில் ,
திமுக+ காங்கிரஸ் – 29
அதிமுக + பிஜேபி – 9

இது மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி தான் பெருன்பான்மையை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன . இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் . ஆனால் பலமுறை கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே இம்முறை கருத்து கணிப்பு முடிவுகள் கூறியபடி பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைக்கிறதா இல்லையா என்பதை மே 23 அன்று காத்திருந்து காண்போம் .