அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி!!!

0
207

தமிழகத்தின் முன்னாள் முதலவர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பின்னர் அப்போலோ மருத்துவமனை தமிழகத்தில் மிகவும் சர்ச்சையாகவே பார்க்கப்பட்டது.. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோரும் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு அங்கு வழக்கமான செக் அப் தான் என தெரியவந்துள்ளது.

ஆனால் அதற்குள் அவர் அப்போலோமருத்துவமணியில் அனுமதியான செய்தி தமிழகத்தில் தீயாய் பரவியது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு உடல்நிலை சற்று மோசமானதால் அவருக்கு கிரீன்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.