இறுதிகட்ட பிரச்சாரம் தொடர்பாக வீடு புகுந்து மிரட்டினார்கள் – கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி!!

0
176

கரூர் பகுதியில் உள்ள மனோகரா கார்னரில் இறுதி கட்ட பிரச்சாரத்தை யார் முடிப்பது என்று அதிமுக மற்றும் திமுக காங்கிரசு கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரசு வேட்பாளர் ஆகியோர் நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் மேற்பார்வையாளிடம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அனுமதி கொடுக்கப்பட்டது. அதேநேரம் அதிமுக சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர் கலெக்டர் அலுவலகம் வந்து பேசிய பொது அவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய கலெக்டர் கூறியதாவது, திமுக ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டனர். இது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இந்த அச்சுறுத்தலால் தான் நான் அவர்களுக்கு ஒப்புதல் அளித்தேன் என்றார்