விடுபட்ட தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.. டெல்லியில் திமுகவினர் மனு!!

0
75

அது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக தமிழகம் முழுதும் தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில் தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதற்காக டெல்லியில் இன்று திருச்சி சிவா டிகேஎஸ் இளங்கோவன் ஆர் எஸ் பாரதி முதன்மை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த மனுவில், மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு உடனடியாக நடத்த வேண்டும்.

இதனால் தமிழகத்தின் ஆட்சி மாற்றமும் ஏற்படலாம். எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here