அதிமுகவுடன் கைகோர்த்தது தேமுதிக!! பின்னணி என்ன??

0
184

2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் கலைகட்டியுள்ள நிலையில் நேற்றைய தினம் தேர்தல்களுக்கான தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது. மேலும் 21 தொகுதிகளில் 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பல கட்சிகள் தனது ஆதரவு யாருக்கு என்று உனக்காகவே அறிவித்துவிட்டு கூட்டணியில் ஈடுபட்டு வந்த நிலையில், விஜயகாந்தின் கட்சியான தேமுதிக யாருடன் கூட்டணி என்று இழுபறி நிலையே நீடித்து வந்தது.

அதன்பிறகு திமுகவின் துரைமுருகன் தேமுதிகவின் நம்மை சுதீஷ் இடம் தற்போது திமுகவில் தொகுதிகள் இல்லை எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரேமலதாவும் துரைமுருகனை கடுமையாக சாடினார்.

தற்பொழுது அதிமுகவிடம் இணக்கம் ஆகியுள்ளது தேமுதிக. மேலும் தேமுதிகவிற்கு நான்கு தொகுதிகள் வழங்கப்படவிருக்கின்றன. அதற்கான வேட்பாளர்களை சில தினங்களில் அறிவிப்போம் என தேமுதிக தரப்பு தெரிவித்துள்ளது.