மக்களவை தேர்தலில் கலக்க போகும் நபர்கள்—நெட்டிசன்களுக்கு சரியான வேட்டை..

0
171

தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் 30 நாட்களே இருக்கின்றன. இன்று முதல்கட்ட வேட்புமனுதாக்கல் தொடங்கியுள்ளது.இதுவரை மதிமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் வேலைகளை மும்முரமாக செய்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.நேற்று இலட்சிய திமுகவின் நிறுவனர் டி.ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இலட்சிய திமுகவின் குறிக்கோள் சட்டமன்ற தேர்தல்தான். மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தியதாலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம். தற்போது அதற்கான வேட்பாளர் மனு வாங்கும் நிகழ்வும் ஆரம்பமாகியிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

பெரிய கட்சிகள் கடும் போட்டியில் உள்ள நிலையில் இவர்கள் தனித்து நின்று என்ன செய்ப்போகிறார்கள் என்று தெரியவில்லை.எனினும் இவர்கள் தேர்தல் நேரத்தில் செய்யும் காமெடிகளை வைச்சு செய்ய நெட்டிசன்கள் இப்போதே தயாராகிவருகின்றனர்.