வெற்றி பெற்றால் ஏழை எளிய மக்களுக்கு வருடம் 72000! காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

0
127

காங்கிரஸ் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை எளிய மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் வீதம் வருடம் 72000 ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று அறிவித்துள்ளது.

அதில் முக்கியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூபாய் 6000 வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக மாதம் 12 ஆயிரத்திற்கு கீழ் வருமானம் பெறும் மக்களுக்கு இந்தத் திட்டம் எளிதாக சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதி காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைக்கும் என விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

ஏனெனில்….

  • 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற காரணம் 100 நாள் வேலைத்திட்டம்…
  • 2014இல் பாரதிய ஜனதா அதில் வெற்றி பெற காரணம் காஸ் மானிய திட்டம்….


தற்போது அதனை போன்று காங்கிரஸ் கட்சி இன்று ஒரு மெகா திட்டத்தை அறிவித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.