தேர்தல் விதிமுறையை மீறிவிட்டாரா? உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு!!

0
60

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் மற்றும் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நகரின் நான்கு முனை சாலை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி வாக்கு சேகரிப்பை செய்துகொண்டிருந்தார். 

இதனால், அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, தேர்தல் பறக்குப்படை மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் IPC 143,341 மற்றும் 188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here