விளம்பரங்களுக்கு கோடிகளில் செலவழிக்கும் அரசியல் கட்சிகள்!! பாஜக முதலிடம்.. அப்போ காங்கிரசு??

0
179

இணையத்தின் ஜாம்பவானாக விளங்கும் கூகுளில், பல முன்னணி நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போது அந்த வேளையில் இந்திய தேசிய கட்சிகள் இறங்கிவிட்டன. குறிப்பாக, பாஜக 32 சதவீதம் பங்குகளை கூகுளில் விளம்பரத்திற்க்காக வைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், மொத்தம் ரூ.3.76 கோடி விளம்பரம் செய்ய மட்டுமே பயன்படுத்த பட்டுள்ளது. பெரும்பான்மையாக, ஆளும் கட்சியான பாஜக ரூ.1.21 கோடி ருபாய் செலவிட்டுள்ளது. 

இரண்டாவது இடத்தில், ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி ரூ.1.04 கோடி செலவிட்டுள்ளார். அடுத்ததாக, தெலுங்கு தேசம் கட்சி தங்களது விளம்பரத்திற்க்காக ரூ.85.25 லட்சம் செலவிட்டுள்ளது.

காங்கிரஸ் இந்த விவகாரத்தில் 6வது இடத்தில உள்ளது.