தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போ கிடையாது- உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

0
97

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதே நேரம், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்நடத்தப்பட உள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தலை தற்போது நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறியது.

இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை வழக்கம் போல நடத்தலாம். 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி டெல்லியில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் வினவியது. இதற்க்கு மற்ற தொகுதி தேர்தல் வேலைகள் பாதிக்கப்படும், அதனால் ஒரே நேரத்தில் நடத்துவது கடினம். பின்பு நடத்திக்கொள்ளலாம் என கூறிவிட்டது.

ஆதலால், நாடாளுமன்ற தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டவுடன் மீதமுள்ள தொகுதிகளுக்கு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.