சாதி பெயரை சொல்லி மாட்டிக்கொண்ட வில்லன் நடிகர்..

0
302

தமிழ் சினிமாவில் வில்லன்,நகைச்சுவை,குணச்சித்திர கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தவர் ஆனந்த்ராஜ். சமீபத்தில் தனது சாதி பெயரை ஒரு பேட்டியில் சொல்லி மாட்டிக்கொண்டார்.பத்திரியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது”ஸ்டெர்லைட், மீத்தேன், நீட் என எந்த பிரச்சினைகள் குறித்தும் தமிழக கட்சிகள்,தேசிய கட்சிகள் என எந்த கட்சியும் அதற்க்கு தீர்வு காணவில்லை.இதனால், நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய போகிறேன்.

நோட்டாவிற்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆனால் ஏன் அதற்கு இவ்வளவு வாக்குகள் வந்தது என்று தேர்தல் ஆணையம் திரும்பிப் பார்க்க வேண்டும்.நான் முதலியார் இனத்தைச் சார்ந்தவன். என் இனம் சார்ந்த மக்களும் நான் வாக்குக் கேட்கும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்” என தனது சாதி பெயரை குறிப்பிட்டார்.இதையடுத்து, நீங்களும் சாதி அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர், அதற்கு ஆனந்தராஜ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.